![bhsfhsfh](http://image.nakkheeran.in/cdn/farfuture/T5ScMldT5gc1Kf6RI18SHxMF8nHj4djBwgYfVhiQ54c/1601100597/sites/default/files/inline-images/EizyDKbU0AEqDth.jpg)
'பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) மறைந்தார். கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று மதியம் 01.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பி திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், "தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்'' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு பிரபலங்கள் பலரும் நன்றி தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...
"RIP-Spb- வீடியோ பதிவு செய்த பின் அரசுக்கு விண்ணப்பம் வைக்க உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன். அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை என அறிவித்த தமிழக அரசுக்கு spb சாரின் ரசிகர்களின் சார்பில் நன்றி!" என கூறியுள்ளார்.