தமிழில் ஈஸ்வரன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி, உதயநிதிக்கு ஜோடியாக கலகத் தலைவன் ஆகிய படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அங்கு தற்போது பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் நிதி அகர்வால் சமூக வலைதளங்களில் தனக்கு மிரட்டல் வந்துள்ளதாக சைபர் போலீஸிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், ஒரு நபர் தனக்கு அச்சுறுத்தல் விடும்படி கருத்து தெரிவித்துள்ளதாகவும் வன்முறை தூண்டும் படி கமெண்ட் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த நபரின் பெயரைத் குறிப்பிடாமல் புகார் கொடுத்துள்ள அவர், அந்த நபரின் கருத்துகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நிதி அகர்வாலின் புகாரை பெற்றுக் கொண்ட சைபட் கிரைம் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.