விருமாண்டி, காதல், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் காதல் சுகுமார். இந்த நிலையில் இவர் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வட பழனி காவல் நிலையத்தில் துணை நடிகை ஒருவர் கொடுத்த புகாரில், “எனக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது. ஆனால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். இந்த சூழலில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் காதல் சுகுமாரன் என்னுடன் பழகி வந்தார். அது காதலாக பின்பு மாறியது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதை வைத்தே என்னிடம் நகை பணம் வாங்கியுள்ளார். ஆனால் இப்போது தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக கூறி, என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்ற பார்க்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
துணை நடிகையின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.