Published on 22/01/2021 | Edited on 22/01/2021
![yogi babu](http://image.nakkheeran.in/cdn/farfuture/shgLOSajMmLo7PUlP84sxCGmn328652-feXIZksK94A/1611308108/sites/default/files/inline-images/EsUbPxsUYAEV82D.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித், தனது 'நீலம் ப்ரொடக்சன்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் தயாரித்த 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், நீலம் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
'பொம்மை நாயகி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் ஷான் இயக்குகிறார். இந்தப் படத்தின் பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.