Skip to main content

“இனி என் வாழ்நாளில் இதை செய்யவே மாட்டேன்” - கடுப்பான நஸ்ரியா

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

nazriya never travel Thai Airways

 

நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமனார். அதன் பின்னர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகிய நஸ்ரியா, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 

 

ad

 

இந்நிலையில் நடிகர் நஸ்ரியா தாய்லாந்து பயணத்தின் போது தாய் ஏர்வேஸ் விமானத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தாய் ஏர்வேஸின் சேவை மிக மோசமாக இருந்தது. விமானத்தில் எனது பைகள் காணாமல் போனதால் உதவி கேட்டு பணியாளர்களை அழைக்கும் போது அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இனிமேல் என் வாழ்க்கையில் அந்த விமானத்தில் பயணம் செய்யமாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்