வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் அசுரன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர், அம்மு அபிராமி, மகன்களாக டீஜே, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
![narappa](http://image.nakkheeran.in/cdn/farfuture/_pILXOLi7pkX4EUz3pPOLTUunt4rGm0S92Cxh3mx2X0/1579674136/sites/default/files/inline-images/narappa.jpg)
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் என்பதால் இதை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் போட்டிபோட்டார்கள். அந்த வகையில் தெலுங்கு ரீமேக் உரிமையை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் வாங்கியது. அதன் பின்னர் அந்த நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.எஸ்.தாணுவும் தயாரிக்கிறார். ஸ்ரீகாந்த் அடலா இப்படத்தை இயக்குகிறார்.
தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. பலரும் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிப்பது சாத்தியமாகுமா என்று எதிர்பார்த்த நேரத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அசுரன் படத்திற்கு தெலுங்கில் நாரப்பா என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது.