Skip to main content

கௌபாய் லுக்கில் கலக்கும் தனுஷ்! வெளியானது ‘நானே வருவேன்’ அப்டேட்!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

Naane Varuven

 

‘மாறன்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள தனுஷ், அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் தொடர்பான அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னரே வெளியிட்ட படக்குழு, படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவந்தது.

 

ad

 

இதற்கிடையே, இயக்குநர் செல்வராகவன் ‘பீஸ்ட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், ‘நானே வருவேன்’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என நேற்று மாலை படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு இன்று (16.10.2021) வெளியிட்டுள்ளது. கௌபாய் லுக்கில் தனுஷ் தோற்றமளிக்கும் அந்தப் போஸ்டரில் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்