![Naane Varuven shoot wrapped](http://image.nakkheeran.in/cdn/farfuture/TZWaQKUI9mQEKUAt3oVZGiMMncTEtZwwXx8kcqK7veA/1649663728/sites/default/files/inline-images/160_6.jpg)
கலைப்புலி எஸ் தாணுவுடைய 'வி கிரியேஷன்' தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'நானே வருவேன்'. இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். யுவன் இசையமைக்கிறார். செல்வராகவன் இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் வருகிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகிய இருவரும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் 'நானே வருவேன்' படம் குறித்து புதிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக குறிப்பித்துள்ளார். அத்துடன் காரில் ஸ்டைலாக தனுஷ் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனிடையே நடிகர் தனுஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாத்தி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
And it’s a wrap #Naanevaruven HE IS COMING 🏹 pic.twitter.com/AvfRqO0SG8— Dhanush (@dhanushkraja) April 11, 2022