![mysskin directing vijay sethupathi next film](http://image.nakkheeran.in/cdn/farfuture/g-m9FqqP_1CLBnegdjeofxe1VO5hMZdTbLddmVLu-ks/1647683521/sites/default/files/inline-images/348_1.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின், 'பிசாசு 2' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தைத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'விக்ரம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி தற்போது ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற இந்தி படத்திலும், பொன்ராம் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.