![marvel](http://image.nakkheeran.in/cdn/farfuture/ym5FLBID74nR_liPon9na2vP7lpmDPrqCO6IhmkJ19s/1563785290/sites/default/files/inline-images/fda4bc57-5e7e-41a7-bd54-26fe93bb303a.jpg)
மார்வெல்லின் 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சமீபத்தில் 'அவதார்' சாதனையை முறியடித்து வசூல் சாதனையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மார்வெல் ரசிகர்கள் இதை உற்சாகமாக கொண்டாடிவரும் நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவரவுள்ள மார்வெல் படங்கள் வரிசை தற்போது வெளியாகி ரசிகர்களை இன்னும் கொண்டாட வைத்துள்ளது. அதன்படி... 'தோர் - லவ் அண்ட் தண்டர்' நவம்பர் 5 2021, 'பிளேட்', 'பிளாக் விடோ' மே 1 2020, 'ஷாங் சி - லெஜெண்ட் ஆப் டென் ரிங்ஸ்' பிப் 12 2021, 'டாக்டர் ஸ்ட்ரேஞ் - இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னஸ்' மே 7 2021, 'தி எட்டர்னல்ஸ்' நவ 6 2020, 'ஹாக்காயி' 2021, 'வாட் இஃப்...?' 2021, 'லோகி' 2021, 'வண்டா விஷன்' 2021, தி ஃபால்கம் அன் த வின்டர் சோல்ஜர்' 2020, ஆகிய தேதிகளில் வரிசையாக படங்கள் வெளியாகின்றன.