![mansoor ali khan sarakku movie censor board issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/bCVFxNxO-JhNLPT_Oe-2CTGTJ1p0dwjMJ5iXPfSzRF4/1697875055/sites/default/files/inline-images/63_42.jpg)
ஜெயக்குமார் இயக்கத்தில் மன்சூர் அலிகான் தயாரித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'சரக்கு'. இதில் கே.எஸ் ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் மன்சூர் அலிகான். அப்போது அவர் தணிக்கை வாரிய குழு அதிகாரிகள் மேல் பல்வேறு புகார்களை குறிப்பிட்டார். அதன் ஒரு பகுதியாக, "இந்த படம் எனது சொந்த பணத்தில் நான் எடுத்த படம். படத்தை சென்சாருக்கு அனுப்பினோம். படத்தை பார்த்த அதிகாரிகள் இதையெல்லாம் கட் பண்ண வேண்டும் என ஒரு நீண்ட லிஸ்ட் கொடுத்தார்கள். நாங்கள் அதை நீக்கிவிட்டால் படமே இருக்காது என்றோம்.
உதாரணத்திற்கு அதானி, அம்பானி பெயர்கள் வருகிறது இது இருக்கக்கூடாது என்றார்கள். ஏன் இருக்கக்கூடாது என்று கேட்டேன். தனி நபர் என்றார்கள். தனிப்பட்ட நபராக இருந்தால் அவர்கள் என் மீது வழக்கு போடட்டும் என்றேன். நம்முடைய முன்னோர்கள் போராடி பெற்ற இந்த சுதந்திர நாட்டில் பல பொதுத்துறைகளை தனியாருக்கு கொடுத்துவிட்டார்கள். அன்றைக்கு ஒரு ரயிலில் அதானி என்று பெயர் இருக்கிறது.
வெற்றிமாறன் வாச்சாத்தி சம்பவத்தை படமாக எடுத்தார். ஆனால் டைட்டில் கார்டில் இது ஒரு கற்பனை கதை என போட வைத்தார்கள். எனவே அது மாதிரி நாங்களும் டைட்டில் கார்டில் போடு கொள்கிறோம் என்றேன். அதற்கும் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இது போன்ற ஏகப்பட்ட தடைகளை விதிக்கிறார்கள்.
படத்தில் ஒரு பாடலில் திருநங்கைகளை மேம்படுத்த கதாநாயகன் அவர்கள் இடத்தில தங்குகிறான். அந்த காட்சியில் அசிங்கமாக ஒன்றுமே இல்லை. ஆனால் அதில் அது இருக்கு..., இது இருக்கு... என இட்டுக்கட்டி ஏகப்பட்ட காட்சிகள் இருப்பதாக சொல்கிறார்கள். உண்மையில் அதில் ஒண்ணுமே இல்லை. ஆனால் சமீபத்தில் வெளியான காவாலா பாடலில் தமன்னா ஆடியது போல் கவர்ச்சியாக நான் படமெடுக்கவில்லை என்றேன். அதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்றார்.