![mansoor ali khan joins lokesh kanagaraj next movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/H_U9sfvfetr_nIq7Pm1V2aqCmblYjolSrMHVkDUhaQw/1654760225/sites/default/files/inline-images/876_3.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் பல கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் உங்கள் அடுத்த படங்களில் மன்சூர் அலிகானை பார்க்கலாமா எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு லோகேஷ் கனகராஜ் விரைவில் என பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் எந்த படத்தில் என்று தெரியாத நிலையில் சில லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Viraivil 🙌🏻 #AskDirLokesh https://t.co/h8iCLpiICX— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 8, 2022