Skip to main content

மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் சப்ஜெட்; கமலுடன் நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

mammootty act with kamalhaasan mahesh narayanan next film

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது   வருவதாகக் கூறப்படுகிறது. 

 

இப்படத்தைத் தொடர்ந்து கமல் அடுத்ததாக பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பெரும் பொருட்செலவில் மல்டி ஸ்டார் படமாக உருவாக்கவுள்ளது. இதனால் படக்குழு கமலுக்கு இணையாக நடிக்கும் நடிகர்களைத் தீவிரமாகத் தேடி வந்ததாகவும் இறுதியில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியைத் தேர்வு செய்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அவர் ஓகே சொன்னவுடன் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் விக்ரம் பட விழாவில் பேசிய கமல் தரமான கதை அமைந்தால் நானும் மம்மூட்டியும் இணைந்து நடிக்கத் தயார் எனக் கமல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்