![Magamuni](http://image.nakkheeran.in/cdn/farfuture/NYp0asK1viExCJnVkBNWGheSAF9iCGYUEC0pbZq7-jE/1633343733/sites/default/files/inline-images/168_1.jpg)
சாந்தகுமார் இயக்கத்தில், ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘மகாமுனி’. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தபோதிலும், வணிக ரீதியாக படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இருப்பினும், தமிழில் வெளியான மிகச்சிறந்த படங்களுள் ஒன்றாக ‘மகாமுனி’ சினிமா ரசிகர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் ‘மகாமுனி’ திரைப்படம் வென்றுவருகிறது.
சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் பூடானில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘மகாமுனி’ திரைப்படம் திரையிடப்பட்டு மூன்று விருதுளை வென்ற நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘மகாமுனி’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த விழாவில் சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு பட நடிகர், சிறந்த வெளிநாட்டு பட திரைக்கதை உட்பட 9 பிரிவுகளில் ‘மகாமுனி’ போட்டியிடுகிறது. இந்த விழாவானது நவம்பர் 9ஆம் தேதிமுதல் 12ஆம் தேதிவரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது.