![maayon movie song goes viral](http://image.nakkheeran.in/cdn/farfuture/cbJyb0nsyBLUIhsgenqIgbaTKfQHV26Qxgjvglr-wJc/1639566655/sites/default/files/inline-images/maayon_1.jpg)
இயக்குநர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் 'மாயோன்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், ராதா ரவி, மாரிமுத்து ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத்தொடர்ந்து மாயோன் படத்தில் இருந்து "மாயோனே மணிவண்ணா... " என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்துள்ள இப்பாடலை ரஞ்சனி மற்றும் காயத்திரி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் யூடியூப் தளத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.