![lucifer 2 announced mohanlal starring Prithviraj directing](http://image.nakkheeran.in/cdn/farfuture/40uVCnRTVCS6BcZs2fpY7_kzhvVzhVzBPuw5sF0UerU/1660745346/sites/default/files/inline-images/26_46.jpg)
மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. 'காட்ஃபாதர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சிரஞ்சீவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மோகன் ராஜா இயக்கி வருகிற இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க சல்மான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது படக்குழு. அதன் படி இப்படத்திற்கு 'எம்புரான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரிக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார். ப்ரித்விராஜ் இப்படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். இப்போது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
.