Skip to main content

'அர்ஜுன் ரெட்டி' செண்டிமெண்டை பின்பற்றும் 'லைகர்' படக்குழு !

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

liger movie release date announced

 

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லைகர்' படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்துவருகிறது. பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'லைகர்' படத்தைத் தயாரிக்கிறது. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

 

விஜய் தேவரகொண்டா மற்றும் மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கிவரும் படக்குழு, படத்தின் க்ளிம்ப்ஸ் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் க்ளிம்ப்ஸ்  வீடியோ வரும் 31ஆம் தேதி வெளியாகும் என்றும், ‘லைகர்’  திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 

விஜய் தேவரகொண்டாவின் சினிமா வாழ்க்கையை மாற்றிய 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியான நிலையில், தற்போது 'லைகர்' திரைப்படமும் அதே தேதியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்