விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முற்றிலும் முடிவடைந்து, இறுதி பணிக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அப்படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.
![குஷ்பு](http://image.nakkheeran.in/cdn/farfuture/PJEDxxgbJ3cYKzybYW4-fD3smlkujeJSr0sHYyk01pQ/1584097094/sites/default/files/inline-images/kushboo_9.jpg)
இதன்பின் நேற்று காலை 11 மணி முதல் ஏற்கனவே பிகில் பட விவகாரத்தில் நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்திய அதே 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த விசாரணை நிறைவுபெற்றபின் வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய் பிகில் படத்திற்கு 50 கோடி ரூபாயும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாயும் சம்பளமாக பெற்றுள்ளதாகவும், அதற்கு அவர் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பு விஜய்க்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். அதில், “விசாரணை முடிந்தது: நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது. #பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, #மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார். 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர். இப்போ நாம வழக்க முடித்துக்கொள்ளலாமா?" என்று பதிவிட்டுள்ளார்.