![kkr player venkatesh iyer loves priyanka jawalkar](http://image.nakkheeran.in/cdn/farfuture/JqLtI7i8MWefufrWmQsSFpG_0X75xBIvQ962h9iwiAE/1649333323/sites/default/files/inline-images/132_19.jpg)
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் பெற்றார்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் பிரபல தெலுங்கு நடிகை பிரியங்கா சல்வாரை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இவர் 'டாக்ஸி வாலா' படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில் நடிகை பிரியங்கா ஜவால்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த கிரிக்கெட் வீரர் 'க்யூட்' என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பிரியங்கா ஜவால்கர் "யாரு நீங்களா?" என பதில் கமெண்ட் செய்திருந்தார். இதை பார்த்த பலரும் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் இருவரும் நீண்ட நாளாகவே காதலித்து வருகின்றனர். இந்த கமெண்ட்ஸ் தற்போது அதனை உறுதி செய்துள்ளது என்ற கோணத்திலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் திரைப்பட நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த பட்டியலில் வெங்கடேஷ் ஐயரும் இணைவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.