![kerala song](http://image.nakkheeran.in/cdn/farfuture/WRB_UzGUPUV3m492uEx9Pr3vWylY_Tx5vwhOWk5Cd7k/1544889420/sites/default/files/inline-images/maxresdefault%20%2814%29.jpg)
'அவ்னி மூவிஸ்' சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் படம் ‘நட்பே துணை’. இதில் நாயகனாக ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியும், நாயகியாக புதுமுகம் அனகாவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் பாடல் கேரளா கலந்த தமிழ் பாடலாக வந்துள்ளது. இதன் வரிகள் தமிழ் கலந்த மலையாளமாக இருப்பதால் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. இப்பாடலை ‘ஹிப் ஹாப் தமிழா‘ ஆதியே எழுதி பாடியும் இருக்கிறார். இவருடன் ரஞ்சித் உன்னி, ஹரிஹரசுதன், நிகில் மேத்யு, விஷ்ணுப்ரியா, லதா கிருஷ்ணன், நின்சி வின்சென்ட் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே பலராலும் பார்க்கப்பட்டு பாராட்டைப் பெற்றுவருகிறது. அடுத்த பாடலை எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடையே அதிகரித்துள்ளது. ‘நட்பே துணை’ என்று பெயர் வைத்தாலும் இப்படத்தில் காதல், விளையாட்டு என்று அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படத்தின் கதை இருக்கும் என்று இப்படத்தின் இயக்குநர் டி.பார்த்திபன் தேசிங்கு கூறியிருக்கிறார்.