Skip to main content

கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ - ஓடிடி அப்டேட்

Published on 10/09/2024 | Edited on 10/09/2024
keerthy suresh ragu thatha ott update

கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘ரகு தாத்தா’ படம் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியானது. ஹோம்பாலே நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை சுமன் குமார் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்க எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

இப்படத்தின் ட்ரெய்லரில் இந்தி எதிர்ப்பு குறித்து காட்சிகள் இருந்ததால் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படம் ஒரு காமெடி கலந்த குடும்ப டிராமாவாக அமைந்திருந்தது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஜீ5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதுப் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்