Published on 12/01/2019 | Edited on 12/01/2019
![keerthy](http://image.nakkheeran.in/cdn/farfuture/zOJtoQuM7DdFLWpp0FAUm939GvVkwiVP5XPX0NZTing/1547309392/sites/default/files/inline-images/DwkGV7zUcAAfYcv.jpg)
சர்கார் படத்திற்கு பிறகு சில நாட்கள் ஓய்வில் இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மீண்டும் 'நடிகையர் திலகம்' படம் பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தெலுங்கில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க இருக்கிறது படக்குழு. தற்சமயம் 'கீர்த்தி 20' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.