![kasthuri](http://image.nakkheeran.in/cdn/farfuture/T01LZqPBJE3f3wDaDioNicSKZfONXd0nfybGG4Qcu5M/1533347624/sites/default/files/inline-images/DencZzQUcAAhDhK.jpg)
அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிடும் நடிகை கஸ்தூரி சமீபத்தில் வெளியான 'தமிழ்ப்படம் 2.0' படத்தின் டீசரில் படு கவர்ச்சியான உடையணிந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும் ரசிகர்கள் பலரும் கஸ்தூரியை கிண்டல் செய்த சமயத்தில் கடும் கோபமடைந்த கஸ்தூரி 'கதாநாயகர்களை பார்த்து நீங்கள் இப்படி கேட்பதில்லை. ஆனா நடிகைகள் என்றால் மட்டும் கேட்கிறீர்கள்' என்று அவர்களை சாடியிருந்தார். இந்நிலையில் தற்போது இப்பாடலில் ஆடியதை குறித்து மனம் திறந்து மீண்டும் கஸ்தூரி பேசும் போது... "அந்த படத்துக்கு பூஜை போட்ட உடனேயே எடுத்தது என்னுடைய பாடல் தான். பாடல் முழுக்க மூன்று சேலைகள் தான் எனக்கு காஸ்ட்யூம். ஆனால் செம கவர்ச்சியாக இருக்கும். முதல் பாகத்தில் நான் ஆடியதால் ஆஸ்திரேலியாவில் இருந்த என்னை அழைத்து செண்டிமெண்ட் ஆக ஆடவைத்து இருக்கிறார் சி.எஸ்.அமுதன்" என்று ஆடியதற்கு விளக்கமளித்தார்.