Skip to main content

கங்குவா; வெளியான புது ரிலீஸ் தேதி அப்டேட்

Published on 19/09/2024 | Edited on 19/09/2024
kanguva new release update

சூர்யா கடைசியாக ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்திற்கு பிறகு கமலின் ‘விக்ரம்’, மாதவனின் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’, சூரரைப் போற்று இந்தி ரீமேக்கான அக்‌ஷய் குமாரின் ‘சர்ஃபிரா’ உள்ளிட்ட படங்களில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்போது ஹீரோவாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து கார்த்திக் சுப்புராக் இயக்கத்தில் இன்னும் பெயரிடாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  

இதில் கங்குவா படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடித்து வர பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் ‘ஃபயர் சாங்...’ பாடல் உள்ளிடவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே தேதியில் ரஜினிகாந்தின் வேட்டையன் படமும் ரிலீஸாகவிருப்பதால், இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கவுள்ளதாக சமீபத்தில் நடந்த ‘மெய்யழகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியிருந்தார். இதையடுத்து இப்படம் வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்து. 

இந்த நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே தகவல் வெளியானது போல் இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன், அவர்களது எக்ஸ் பக்கத்தில் சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். சூர்யா ஹீரோவாக நடித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த படமும் வெளியாகாததால் இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சார்ந்த செய்திகள்