Published on 26/11/2018 | Edited on 26/11/2018
பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய படத்தை இயக்கி வரும் படம் 'கனா'. ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். இதில் நடுத்தர வீட்டுப் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார் என்பதை மையப்படுத்தி இப்படத்தை அருண்ராஜா காமராஜின் ஆருயிர் நண்பர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.