இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு இன்று தனது 100வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க தலைவர் வைகோ மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்டோர் சமூக வலைதளப் பக்கங்களில் வாயிலாக வாழ்த்துக்களைஅ தெரிவித்தனர். இந்த நிலையில் அரசியல் தலைவர்கள் தாண்டி திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைதளத்தில், “அர்ப்பணிப்போடு அரசியலில் தன்னை இனைத்துக் கொண்டு தன் வாழ்வை மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்து, பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற நேர்மையோடும், எளிமையோடும் இயங்கிவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர். ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீடோடி வாழ்க, மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.