Published on 18/05/2022 | Edited on 18/05/2022
![kamalhaasan tweet about perarivalan release](http://image.nakkheeran.in/cdn/farfuture/yLAgF7Bz64jt3nyPgzaCruiTCmqQQczSLuha0QzBTrA/1652858969/sites/default/files/inline-images/592_1.jpg)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவிப்பதோடு, பேரறிவாளனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்"எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்.— Kamal Haasan (@ikamalhaasan) May 18, 2022