Skip to main content

நடிகர் விஜய்யை ’ஐயா’ என அழைத்தது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம் 

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

Kamal hassan

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் 
நடிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படம், கடந்த 3ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசனும், லோகேஷ் கனகராஜும் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அந்த நிகழ்வில் மக்களிடம் படங்களைக் கொண்டு சேர்த்ததற்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த இருவரும், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

 

விஜய்யுடன் இணைந்து படம் பண்ண வாய்ப்பிருக்கிறதா, விஜய்யை ஐயா என அழைத்தது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்த கமல்ஹாசன், ”விஜய்யுடன் இணைந்து படம் பண்ண ஏற்கனவே நாங்கள் பேசியிருக்கிறோம். அதற்கான கதையும் நேரமும் வர வேண்டும். அது வரும்போது நிச்சயம் நடக்கும். விஜய்யை ஐயா என்று சொன்னீர்கள், அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார்கள். அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. சிவாஜி சார் கமல்ஹாசன் ஐயா அவர்களே என்று என்னைச் சொல்வார். அது பாசத்தில் சொல்லும் ஒரு வார்த்தை அவ்வளவுதான்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்