![jaam jaam movie update](http://image.nakkheeran.in/cdn/farfuture/dvGMJ-ZKyfYrZB5vJOB7-TdbAgW4tNQIs9x4MZBoZF8/1708091783/sites/default/files/inline-images/209_16.jpg)
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனம் ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சுலர்’ என்ற இரண்டு காதல் படங்களைத் தொடர்ந்து தற்போது அடுத்த காதல் கதையாக ‘ஜாம் ஜாம்’ படத்தை அறிவித்துள்ளனர். இதில் ரெஜினா கசாண்ட்ரா நடிக்கவுள்ளார். இந்தப் படம் மூலம் யூடியூபர் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படம் குறித்து அவர் கூறுகையில், “வழக்கமான ரொமாண்டிக் காமெடி எண்டர்டெயினர் படமாக இது நிச்சயம் இருக்காது. மாறாக, அதிகமான எண்டர்டெயின்மெண்ட்டோடு ரொமான்ஸ் மற்றும் த்ரிலிங்கான தருணங்களும் இந்தப் படத்தில் இருக்கும்” என்றார்.
இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டராக இருந்து இயக்குநராக மாறி ’முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய அபினவ் சுந்தர் நாயக் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். நவதேவி ராஜ்குமார் ஆடை வடிவமைப்பையும், அழகியகூத்தன் மற்றும் சுரேன் ஜி ஒலிப்பதிவையும் கவனிக்கிறார்கள். இப்படத்திற்கு பிரதீப் ராஜ் கலை இயக்குநராக உள்ளார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும்.