Published on 09/06/2018 | Edited on 09/06/2018
![vishal](/modules/blazyloading/images/loader.png)
அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கதில் விஷால் நடித்த 'இரும்புத்திரை' படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது. நாயகியாக சமந்தா நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக அர்ஜுன் நடித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் இப்படம் நல்ல வசூலை ஈட்டி தந்ததையடுத்து தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் இப்படத்தை டப் செய்து வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது எதிர்பார்த்தது போலவே தெலுங்கிலும் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதுவரை இப்படம் அங்கு 12 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இனிவரும் நாட்களிலும் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் கிட்டதட்ட நேரடி தெலுங்கு படங்களுக்கு நிகரான வசூலை விஷால் அங்கு பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.