Skip to main content

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்; உற்சாகத்தில் ரசிகர்கள்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

iravin nizhal movie new release date announced

 

‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

இப்படம் கடந்த 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களுக்காகப் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். அதன்படி இரவின் நிழல் திரைப்படம் ஜூலை மாதம் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்