திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜாவும் இணைந்து தயாரித்த 'இன்று நேற்று நாளை' படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் தற்போது அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த அறிவிப்பை சமூகவலைத்தளத்தில் பார்த்த விஷ்ணுவிஷால்... 'படத்தில் நானும், கருணாகரனும் இருக்கிறோமா' என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த சி.வி.குமார், நீங்கள் இருவரும் இல்லாமல் எப்படி? என்று கூறியிருப்பதன் மூலம் இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.