Published on 25/07/2022 | Edited on 25/07/2022
![Ilayaraja](http://image.nakkheeran.in/cdn/farfuture/99RbJJ57JD7X2oSvvZfjOU-CS8LZATazlycocii4ni8/1658742906/sites/default/files/inline-images/83_28.jpg)
மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்ட்ட இசையமைப்பாளர் இளையராஜா இன்று பதவியேற்றார்.
பதவியேற்புக்காக இன்று காலை டெல்லி வந்த இளையராஜாவுக்கு பாஜகவினர் விமான நிலையத்தில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பதவிப்பிரமாணம் செய்யும்போது, மாநிலங்களைவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் இளையராஜா எனும் நான் சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உண்மையான பற்றுறுதி கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் உறுதியாக பற்றியிருப்பேன் என்றும் நான் இப்போது ஏற்க இருக்கும் கடைமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன்” எனத் தமிழில் வாசித்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.