Skip to main content

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹிப்ஹாப் ஆதி?

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

hiphop aadhi

 

'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்திவரும் இவர், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘அன்பறிவு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார் 

 

படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாபாத்திரம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹிப்ஹாப் ஆதி இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்