![tegdgdg](http://image.nakkheeran.in/cdn/farfuture/V9WIo__o9h3lE6dlwKV9OQ2ywSKCzmocy2uI3Zn1uMA/1621242668/sites/default/files/inline-images/adhi_0.jpg)
நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
இந்த நிலையில், இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கரோனா தொற்றால் காலமானார். இவருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிந்துஜா மரணமடைந்தார். சிந்துஜாவின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில், நடிகர் ஹிப்ஹாப் தமிழா மறைந்த அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் அதில்...
![vfsgfsgs](http://image.nakkheeran.in/cdn/farfuture/CRV1CfaTWTzT8lVQOPqQ539kfeKuFpaVh_XcMPn6ql4/1621242688/sites/default/files/inline-images/671787.jpg)
"சிந்து அருண்ராஜாவை ஒருமுறை விமான நிலையத்தில் சந்தித்தேன். அத்தகைய இனிமையான ஒரு நபர் அவர். அவர் கணவரைப் பற்றி அவர் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் நினைத்து இருந்தார். அற்புதமான ஜோடி. இப்போது கூட இது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. அருண்ராஜா காமராஜ் சகோதரருக்கு என் ஆழ்ந்த இரங்கல். உங்கள் இழப்பிற்கு வருந்துகிறேன். வலுவாக இருங்கள்" என பதிவிட்டுள்ளார்.