Published on 18/05/2018 | Edited on 19/05/2018
தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல வடிவங்களிலும் கலக்கிக்கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். 'நாச்சியார்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடங்காதவன், 4ஜி, சர்வம் தாளமயம் என்று அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சமூக பிரச்சனைகளுக்கு ட்விட்டரில் குரல் கொடுப்பதிலும், சில சமயங்களில் போராட்டங்களில் கலந்து கொள்வதிலும் கூட ஈடுபடுகிறார்.
ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து நீட், கதிராமங்கலம், நெடுவாசல், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என இவர் குரல் கொடுத்ததையும் ஈடுபட்டதையும் சமூகப் பணியாக கருத்தில் கொண்டு, அதை கௌரவிக்கும் விதமாக செயின்ட் ஆண்ட்ரூஸ் இறையியல் பல்கலைக்கழகம் என்ற பல்கலைக்கழகம் ஜி.வி.பிரகாஷிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கு முன் நடிகர் விஜய்க்கு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.