Skip to main content

அடுத்தடுத்து வெளியாகும் ஜி.வி. பிரகாஷ் படங்கள்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

gv prakash jail movie release date announced

 

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையிலும், ஜெயில் படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

 

ad

 

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'ஜெயில்' திரைப்படம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள 'பேச்சிலர்' திரைப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜி.வி பிரகாஷின் அடுத்தடுத்த படங்கள் ஒரே மாதத்தில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்