![ddbd](http://image.nakkheeran.in/cdn/farfuture/xAcT16xx3SFMMBzEg4FyPGYZSpkVmhH93XswNcww8WY/1628069498/sites/default/files/inline-images/DSC05415D.jpg)
திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களைக் கவர்ந்துவருகின்றன. அந்தவகையில் 'விகடன் டெலிவிஸ்டாஸ்' மற்றும் 'மோஷன் கன்டென்ட் குரூப்' இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் 'ஆதலினால் காதல் செய்வீர்'. இந்த டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். வெப் சீரிஸ் ஒன்றில் டைட்டில் பாடலைப் பாடுவது ஜி.வி. பிரகாஷின் கேரியரில் மட்டுமல்ல, வெப் சீரிஸ் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.
“'ஹே நண்பா.. நேத்து நாளை கவலை இல்ல.. இன்று மட்டும் போதுமே!
ஹே நண்பா... கடலும் மணலும் போலவே சேர்ந்திருப்போம் எப்போதுமே..” என்கிற இந்தப் பாடலை நித்திஷ் எழுத, மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிற 'ஆதலினால் காதல் செய்வீர்’ ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ். இந்தப் பாடலைப் பாடியதற்காக தனக்குத் தரப்படும் ஊதியத்தை, முதுகலை மாணவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு அப்படியே ஒதுக்கிவிடுவதாக ஜி.வி. பிரகாஷ் அறிவித்துள்ளார். இந்த 'ஆதலினால் காதல் செய்வீர்' டைட்டில் பாடல் இன்று (04.08.2021) விகடன் டெலிவிஸ்டாஸ் யூ டியூப் பக்கத்தில் ஒளிபரப்பாகியுள்ளது.