Skip to main content

மீண்டும் இணையும் சூரரைப் போற்று கூட்டணி!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

gv prakash

 

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள், விமர்சகர்கள் எனப் பல தரப்பினராலும் கொண்டாடப்பட்ட இப்படம், இந்தியா மட்டுமின்றி பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகளை வென்றுவருகிறது.

 

இந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற ஆல்பம் என்ற விருதை சோனி நிறுவனம் சூரரைப் போற்று படக்குழுவிற்கு வழங்கியுள்ளது. சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சுதா கொங்கரா மூவரும் அந்த விருதுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், சூரரைப் போற்று கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இந்த ட்வீட் தற்போது வைரலாகிவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்