!['the gray man' dhanush action sequence video released by russo brothers](http://image.nakkheeran.in/cdn/farfuture/KFawaB6ptMdnutNw7XbjSzx27S8fIaM27dInuVqIaKo/1657603693/sites/default/files/inline-images/136_19.jpg)
'அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில், தனுஷ் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி கிரே மேன்'. கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் இவர்களுடன் இணைந்து தனுஷும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் குறிப்பிட்ட திரையரங்குகளில் வருகிற 15-ஆம் தேதியும், நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 22-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. அதனால் படக்குழு தற்போது ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட படக்குழு அடுத்ததாக இந்தியாவில் மும்பையில் நடக்கவுள்ள 'தி கிரே மேன்' படத்தின் பிரீமியர் நிகழ்ச்சிக்காக விரைவில் இந்தியா வரவுள்ளனர். இந்நிலையில் படத்தில் தனுஷ் இடம்பெறும் சண்டைக்காட்சியை ரூசோ பிரதர்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளனர். மேலும், தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் 'அவிக் சான்' என்ற தனது கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு இந்த அதிரடி சண்டைக்காட்சி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக 'தி கிரே மேன்' படக்குழு வெளியிட்ட ட்ரைலர் மற்றும் பிரத்யேக வீடியோவில் தனுஷ் அதிகம் இடம்பெறாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் தற்போது தனுஷின் ஒரு காட்சியை மட்டும் படக்குழு வெளியிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Avik san from the #thegrayman @Russo_Brothers https://t.co/YDw98J0O8J— Dhanush (@dhanushkraja) July 12, 2022