Skip to main content

மதுபோதையில் கார் ஓட்டவில்லை... -காயத்ரி ரகுராம்

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
gayathri

 

 

சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த காரை ஓட்டிவந்தவர் நடிகை காயத்திரி ரகுமான் என தெரியவந்தது, போலீசார் அவரிடம் ஓட்டுநர் உரிமத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாத நிலையில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இறுதியில் தான் மது போதையில் காரை இயக்கியதை ஒப்புக்கொண்டதாகவும், அதன்பின்  மது போதையில் கார் ஒட்டியதற்கும், ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கும் 3500 ரூபாய் அபராதம் செலுத்தியதாகவும், அவர் போதையில் இருந்ததால் போலீசார் ஒருவரை அவரது காருக்கு டிரைவராக அமர்த்தி அவரை வீடுவரை கொண்டு சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில் தான் கார் ஓட்டும்போது மதுபோதையில் இல்லை, நான்   மதுபோதையில் கார் ஓட்டவில்லை என ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்