![gautham menon](http://image.nakkheeran.in/cdn/farfuture/SgkIh4VDsscGlnrIWIusaq85nlcsict8MhMr3j_7QbQ/1632140570/sites/default/files/inline-images/52_28.jpg)
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகப் பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகிவரும் இப்படத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் ஆக்ரா சென்ற படக்குழு, பாடலுக்கான காட்சிகளை அங்குப் படமாக்கியது. இந்த நிலையில், டான் படம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.