![gautham menon play as an antagonist michael movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/9ucKTlGhBU2cCDhvjsARGNQNzCVJzUJL1gIFiEN45Dg/1637568855/sites/default/files/inline-images/gautham.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மலையாளம், தெலுங்கு இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதி படங்கள் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'விக்ரம்' படத்தில் கமலுடன் நடித்துவருகிறார். இதனிடையே இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும் நடித்துவருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் 'மைக்கேல்' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ஆக்சன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து கரண் சி. புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.