Published on 19/01/2021 | Edited on 19/01/2021
![shubman gill](http://image.nakkheeran.in/cdn/farfuture/KUH_363OAWWmdikao1x04LAQoYHlxmtfIfPq8cR4IWY/1611048902/sites/default/files/inline-images/Shubman-Gill.jpg)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இளம் வீரர் சுப்மன் கில் 91 ரன்கள் குவித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், சுப்மன் கில் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "களத்தில் நிற்கும்போது சச்சினுக்குப் பிறகு அற்புதமான வீரரைக் கண்டுபிடித்துவிட்டேன். சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பான எதிர்காலம் அமைய அவருக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.