உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. ஆங்கிலத் தொடரான இது இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது. இன்று 8வது சீசனின் முதல் எபிசோட் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
![got](http://image.nakkheeran.in/cdn/farfuture/pp1ZDmKqry9mfxpMq1dGIlBtLTQuad-QopIsEiOy_18/1555308348/sites/default/files/inline-images/got.jpg)
ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்ற அமெரிக்க எழுத்தாளர் 1991ஆம் ஆண்டு ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ என்ற நாவலை எழுதினார். இதனை அடுத்து நான்கு பாகங்களை எழுதியுள்ளார். இதை வைத்துதான் தொடராக எடுக்கப்படுகிறது. இத்தொடரின் முதல் எபிசோட் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியானது. இதுவரை ஏழு சீசன்களாக வெளியாகியுள்ள இந்த தொடரின், ஒவ்வொரு சீசனிலும் 10 பகுதிகள் உள்ளன.
இதில் ஸ்பெஷல் என்ன என்றால் விருவிருப்பாக எழுதப்பட்ட திரைக்கதைதான். இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது. வெஸ்ட்ரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்ஜியங்கள் இடையே நடக்கின்ற போர். யார் இதில் வெற்றிபெற்று அந்த சிம்மாசனத்தில் அமருவார்கள் என்பதுதான் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.
இந்த தொடரின் கடைசி சீசனான 8வது சீசன் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதற்காக கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் காத்திருந்தார்கள். இந்நிலையில் இன்று 8வது சீசனின் முதல் எபிசோட் வெளியாகியுள்ளது. கடைசி சீசன் என்பதால் ஆறு பகுதிகள் மட்டும்தான் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை போன்றே அதிகாலை 6:30 மணிக்கு முதல் எபிசோட் இணையத்தில் வெளியானது.