Published on 31/03/2022 | Edited on 01/04/2022
![gabriella sellus get serial best actress sun kudumbam award](http://image.nakkheeran.in/cdn/farfuture/VRRZqz6Usvb9g8pUN0daL9I9IPxxhwykm73d8yCjifE/1648789472/sites/default/files/inline-images/54_30.jpg)
ஆண்டுதோறும் சன் குழுமத்தின் சார்பில் சின்னத்திரையில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களை தேர்ந்தெடுத்து சன் குடும்ப விருது என்ற பெயரில் விருது வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் சின்னத்திரையில் சிறந்த நடிகர், நடிகை, உள்ளிட்ட பல பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மக்களிடையே பிரபலமான 'சுந்தரி' தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காப்ரியல்லாவுக்கு சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மற்ற விருது போல் இல்லாமல் இந்த விருதுக்கு தகுதியானவரை மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பார்கள். அந்தவகையில் இந்தாண்டு ரசிகர்களின் மனங்களை வென்ற காப்ரியல்லாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.