Published on 09/07/2021 | Edited on 09/07/2021
![Fast and Furious 9](http://image.nakkheeran.in/cdn/farfuture/V1hCSqyMXgchNMvkXp_EruW131xLkkIt3wKxlEyHAEg/1625828000/sites/default/files/inline-images/254_7.jpg)
‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ பட வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம் ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததையடுத்து, கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. பின்பு, கரோனா பரவலால் உலகம் முழுவதும் ஏற்பட்ட நெருக்கடிநிலை காரணமாக படத்தின் ரிலீஸை படக்குழு ஒத்திவைத்து.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த மே மாதம் ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ திரைப்படம் தென்கொரியாவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவிலும் படம் வெளியானது. இந்த நிலையில், இந்தியாவில் இப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்தியாவில் வெளியாகவுள்ளது.