![Fans attacked theatre Pushpa movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/rifzAsK0-Kfj7Hcbi2rl3Y6mquFb3IV05lw7GF-qyY8/1639814071/sites/default/files/inline-images/allu_0.jpg)
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 17ஆம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில், 'புஷ்பா' திரைப்படம் வெளியான திரையரங்கு ஒன்றை ரசிகர்கள் உடைத்துள்ளனர். திருப்பதியில் உள்ள பழனி என்ற திரையரங்கில் தமிழில் வெளியான 'புஷ்பா' படத்தின் ஆடியோ சரியாகக் கேட்கவில்லை எனக் கூறி அமர்ந்திருந்த நாற்காலியை உடைத்து, ஆபரேட்டர் அறைக்குள் ரசிகர்கள் வீசியுள்ளனர். மேலும், திரையரங்கில் உள்ள கண்ணாடிகள், புரொஜெக்டர் உள்ளிட்ட பொருட்களையும் ரசிகர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு ரசிகர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர்.