Skip to main content

பிரபல பாடகரின் மகன் மர்மமான முறையில் மரணம்!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

bobby

 

 

பிரபல ஆங்கில பாடகரின் மகன் பாபி ப்ரவுன் ஜூனியர் மரணமடைந்துள்ள செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

ஆங்கில பாடகர் பாபி ப்ரவுன், 1980-களிலிருந்து ஆங்கில ரேப் பாடல்களை பாடி பிரபலமடைந்தார். இவருடைய மகன் பாபி ப்ரவுன் ஜூனியர் புதன்கிழமை (நவம்பர் 18) லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் இறந்து கிடந்தார். அவருக்கு வயது 28. நேற்றைய தினம் 1:50 மணிக்கு அவர் வீட்டில் இருந்து அவசரமாக ஒரு மருத்துவ அழைப்பு வர போலீஸார் அங்கு விரைந்தனர்.

 

அங்கு சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாபி ப்ரவுன் ஜூனியர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது அகால மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை, சமூக வலைதளங்களில் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கல் செய்திகளை குவித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை நடைபெற்று இதன் முடிவுகள் வெளியாக நேரம் எடுக்கும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்