![suriya](http://image.nakkheeran.in/cdn/farfuture/HKXdUg2hJlM6n6HVPJQ0JxTg12ioMDnPaIqMjgWmDzk/1630474080/sites/default/files/inline-images/66_29.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'சூர்யா 40' எனத் தற்காலிகமாகப் பெயரிட்டு இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவந்தது.
இந்த நிலையில், 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தொடர்ச்சியாக 51 நாட்கள் நடந்துவந்த படப்பிடிப்பு ஷெட்டியூலை நிறைவுசெய்துள்ளோம். மழையாலும் வெயிலாலும் எங்கள் வேகத்தைத் தடுக்க முடியவில்லை. படக்குழுவினர் கடுமையாக உழைத்து நம்பமுடியாத உழைப்பைக் கொடுத்துள்ளனர். சூர்யா, சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.